சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் 46 வயது நடிகை! உடற்பயிற்சி பின்னி பெடலெடுக்கு பிரகதி..
தமிழ் சினிமாவில் அக்கடதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யும் நடிகைகள் அதிகரித்து வருகிறது. அப்படி இளம் நடிகைகளை போலவே குணச்சித்திர ரோலில் நடிக்கும் நடிகைகளையும் தமிழில் நடிக்க வைத்து வருவதுண்டு.
அந்தவரிசையில், கே பாக்யராஜ் இயக்கி நடித்த படம் வீட்ல விசேஷங்க என்ற படத்தில் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரகதி மகாவடி. தெலுங்கு நடிகையாக தமிழில் 90களில் நடித்து வந்த பிரகதி தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்திலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
46 வயதான நடிகை பிரகதி உடல் பயிற்சி செய்வதில் ஆர்வம் கொண்டவர். கடினமாக ஜிம்வொர்க்கவுட் செய்யும் புகைப்படங்களை வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார்.
அந்தவகையில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமந்தா வொர்க்கவுட்டுக்கே டஃப் கொடுப்பாங்களோ என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.