கணவரை பிரிந்த பின் அந்த இடத்தில் டாட்டூ!! நடிகை ரச்சிதா வெளியிட்ட புகைப்படம்..

Bigg Boss Serials Rachitha Mahalakshmi Actress
By Edward Jul 19, 2023 04:27 AM GMT
Report

சின்னத்திரையில் ஒருசில சீரியல்களில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து ஸ்டார் விஜய்யின் சரவணன் மீனாட்சி 2 சீசனில் மீனாட்சியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அந்த சீரியலுக்கு பின் நடிகர் தினேஷ் கோபாலசாமியை 2013ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் சீரியலில் நடித்து வந்த ரச்சிதா பிக்பாஸ் 6 சீசனில் போடியாளராக கலந்து கொண்டு 91 நாட்களுக்கு பின் வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே கணவர் தினேஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தார் ரச்சிதா.

கணவரை பிரிந்த பின் அந்த இடத்தில் டாட்டூ!! நடிகை ரச்சிதா வெளியிட்ட புகைப்படம்.. | Actress Rachitha Post Tattoo Photo Fans Shocking

பிக்பாஸ் முடிந்தது இருவரும் சமரசம் செய்து சேர்ந்து வாழ்வார்கள் என்று நினைத்திருந்தனர். ஆனால் ரச்சிதா, தினேஷ் தன்னை மிரட்டி வருவதாக சில மாதங்களுக்கு முன் புகாரளித்திருந்தார்.

பின் விவாகரத்து செய்யலாம் என்று தினேஷ், ரச்சிதாவிடம் கூறியதாகவும் பேட்டியில் தெரிவித்தார். தற்போது ரச்சிதா பிக்பாஸ் நண்பருடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார்.

இந்நிலையில் கணவரை விட்டு பிரிந்தது கழுத்துக்கு கீழ் பகுதியில் போட்டுக்கொண்ட டாட்டூவை காமித்து ஒரு பதிவினை போட்டுள்ளார். டாட்டூவை பார்த்து நெட்டிசன்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

GalleryGalleryGallery