விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்..வீட்டுக்கு சென்று பார்த்த நடிகை ஓபன் டாக்..

Vijay Rambha Indian Actress Tamil Actress
By Edward Mar 28, 2026 04:53 AM GMT
Report

நடிகர் விஜய் குறித்து பல தகவல்கள் சமீபகாலமாக பல சர்ச்சைகள் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், விஜய் பற்றி நடிகை ரம்பா அளித்த பேட்டியொன்று வைரலாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன் நடிகை ரம்பா தன்னுடைய குடும்பத்துடன் விஜய்யை அவரது வீட்டில் சந்தித்து புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் பகிர்ந்தார்.

விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்..வீட்டுக்கு சென்று பார்த்த நடிகை ஓபன் டாக்.. | Actress Rambha Reveals Vijay S Caring Type

நடிகை ரம்பா

அப்போது அது குறித்து பேசிய ரம்பா, நான் பல நடிகர்களுடன், பல மொழிகளில் நடித்திருந்தாலும், என் மகனுக்கு விஜய் தான் ரொம்ப பிடிக்கும். குறிப்பாக நான் வரவா என்ற பாடல் வந்த சமயத்தில் அப்பாடலை அடிக்கடி போட்டு டான்ஸ் ஆடுவான்.

விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்..வீட்டுக்கு சென்று பார்த்த நடிகை ஓபன் டாக்.. | Actress Rambha Reveals Vijay S Caring Type

வீட்டில் விஜய் படம் டிவியில் வந்தாலே எனக்கு அவரை தெரியும், விஜய் விஜய் என்று கத்துவான். அதனால் தான் ஒரு நாள் விஜய்க்கு மெசேஜ் அனுப்பி குடும்பத்துடன் வந்து சந்திக்கலாமா என்று கேட்டேன். உடனே வரச்சொன்னார். நாங்களும் குடும்பத்துடன் சென்று சந்தித்தோம்.

விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்..வீட்டுக்கு சென்று பார்த்த நடிகை ஓபன் டாக்.. | Actress Rambha Reveals Vijay S Caring Type

அவர் என்னுடன் 10 நிமிடம் தான் பேசினார். ஆனால் என் மகனுடன் ஒரு மணி நேரம் விளையாடிக் கொண்டே இருந்தார். என் மகனும் அவருடன் ரொம்ப நன்றாக பழகிவிட்டான். விஜய்க்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் என்று ரம்பா தெரிவித்துள்ளார்.