இப்படியொரு டீச்சர் ரோல்!! முழு கவர்ச்சிக்கு மாறிய சிம்பு - தனுஷ் பட நடிகை ரம்யா..
கன்னட சினிமாவில் அபி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா. தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான குத்து படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் கிரி படத்தில் நடித்தார். 3 ஆண்டுகள் தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து பிரபலமானார்.
பின் அவருக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்த படம் பொல்லாதவன். தனுஷுக்கு ஜோடியாக நடித்த அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில் அதன்பின் வாரணம் ஆயிரம் படத்தில் பிரியா ரோலில் சூர்யாவின் மனைவியாக நடித்தார்.
இதனைதொடர்ந்து தமிழில் பெரிய வரவேற்பை கொடுக்காத நிலையில் 12 வருடங்கள் தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்துள்ளார். அதன்பின் பிரபல அரசியல் கட்சியில் சேர்ந்து பணியாற்றியும் வருகிறார்.
தற்போது கன்னட மொழியில் உருவாகியுள்ள Hostel Hudugaru Bekagiddare என்ற படத்தில் கல்லூரி ஆசிரியராக அதுவும் கவர்ச்சி டீச்சராக நடித்து மயக்கியுள்ளார்.
அப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. பொல்லாதவன் ரம்யாவா இது என்று அனைவரும் வியந்து பார்த்து வருகிறார்கள்.