இதனால் மனமுடைந்து விட்டேன்.. நடிகை ராஷ்மிகா உருக்கம்

Rashmika Mandanna Pushpa 2: The Rule Actress
By Bhavya Apr 04, 2025 03:30 PM GMT
Report

ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா, எந்த மொழியில் படங்கள் நடித்தாலும் அது மாஸ் ஹிட் தான். கன்னட சினிமாவில் தொடங்கிய அவரது பயணம் தெலுங்கு, தமிழ் இப்போது பாலிவுட் என உயர்ந்து கொண்டே செல்கிறது.

National Crush என்ற பெயருக்கு ஏற்ற வகையில் இந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் ஹிந்தியில் சாவா என்ற படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது.

இதனால் மனமுடைந்து விட்டேன்.. நடிகை ராஷ்மிகா உருக்கம் | Actress Rashmika About An Issue

உருக்கம் 

அதை தொடர்ந்து, சல்மான் கானுடன் ராஷ்மிகா நடித்துள்ள சிக்கந்தர் படமும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், தெலுங்கானா அரசை விமர்சனம் செய்யும் வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்து விட்டேன்.. நடிகை ராஷ்மிகா உருக்கம் | Actress Rashmika About An Issue

தெலுங்கானாவில் 400 ஏக்கர் காட்டின் நிலத்தை அழித்து தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து மாணவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அரசின் இந்த முடிவை கண்டிக்கும் வகையில் நடிகை ராஷ்மிகா தனது எதிர்ப்பை பதிவு மூலம் தெரிவித்துள்ளார். அதில்," இந்த செய்தியை பார்த்து மனமுடைந்து விட்டேன். இந்த முடிவு மிகவும் தவறு என்று பதிவிட்டுள்ளார்.