ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு இல்லை.. மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பறந்த கடிதம்

Rashmika Mandanna Pushpa 2: The Rule Actress
By Bhavya Mar 10, 2025 07:30 AM GMT
Report

ராஷ்மிகா மந்தனா

நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் Kirik Party படத்தில் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் அப்படியே தெலுங்கு பக்கம் சென்றார்.

அவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த Geetha Govindam செம ஹிட் ஆக அந்த மொழி ரசிகர்களையும் கவர்ந்தார். அனிமல், புஷ்பா 2, சாவா என தொடர்ந்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு இல்லை.. மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பறந்த கடிதம் | Actress Rashmika Issue Went Viral

இதில் புஷ்பா 2 படம் உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில், எம்.எல்.ஏ ரவிக்குமார் கவுடா ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று பேசிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னணி என்ன? 

இந்நிலையில், கொடவா தேசிய கவுன்சில் தலைவர் என்.யூ. நச்சப்பா இந்த பிரச்சனை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு இல்லை.. மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பறந்த கடிதம் | Actress Rashmika Issue Went Viral

அதில், " ராஷ்மிகா ஒரு தனி நபர் அவரது சொந்த விருப்பங்களைச் செய்ய உரிமை உள்ளது. மற்றவர்களின் எதிர்பார்ப்புகள் அல்லது அறிவுறுத்தல்களுக்கு யாரும் கட்டாயப்படுத்தப்படக்கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.