எனக்கு அதுபோல் கால் வந்து இருக்கு!! சீரியல் நடிகை ரிஹானா ஓப்பன் டாக்..
ரிஹானா
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை ரிஹானா. பல சீரியல்களில் நடித்து வரும் ரிஹானா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், நான் சீரியலில் புதிதாக அறிமுகமான போது எனக்கும் இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் வந்தது. ஆனால் நான் அதை தவிர்த்துவிட்டேன். என் தோழி ஒருவருக்கும் இதேபோல் அழைப்பு வந்தது. அவரிடம் என்னிடம் கேட்ட அதே கேள்வியை தான் கேட்டிருக்கிறார்கள்.
எப்படியாவது சீரியலில் ஜெயிக்க வேண்டும், பிரபலமாக வேண்டும், வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்று நினைக்கும் பெண்களை தான் அவர்கள் குறி வைக்கிறார்கள். இதுபோல் ஒரு கும்பல் சுற்றி வருகிறது.
உங்களுக்கு ஒரு சிறிய ரோல் கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொண்டு நடிக்க வேண்டும். உங்கள் திறமையை படக்குழுவினர் பார்த்து, அவர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள்.
ஆனால் உடனடியாக பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்து இப்படியான கும்பலிடம் சிக்கிவிட வேண்டாம். யாராவது உங்களிடம் அத்துமீறினால் அதை எதிர்த்து கேடும் தைரியம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியிருக்கிறார் நடிகை ரிஹானா.