ரகசிய காதலுக்கு ஓகே அந்த விசயத்துக்கு நோ... நடிகரை புலம்பவிடும் நேஷ்னல் கிரஸ்..
தெலுங்கு சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் என்ற இடத்தினை பிடித்துள்ளவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. சமீபகாலமாக நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் ரகசிய காதலில் இருந்து வரும் விஜய் தேவரகொண்டா, குஷி உள்ளிட்ட படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.

இதற்கிடையில் தன் ஆசை காதலி ராஷ்மிகாவுடன் மாலத்தீவில் ஒன்றாக இருந்துள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வந்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவிடம் காதலர் தினத்தன்று தங்கள் காதலை வெளிப்படுத்த போவதாக கேட்டுகொண்டார்.
அந்த ஆசைக்கு மறுத்ததோடு காதலுக்கு முட்டுக்கட்டையும் போட்டிருக்கிறார். மேலும் காதலர் தினத்தன்று காதலை கூறுவதோடு திருமண தேதியையும் கூற முடிவெடுத்து ராஷ்மிகாவிடம் கேட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா.

ஆனால் அதற்கு மறுத்த ராஷ்மிகா, தனக்கு இப்பொழுது தான் முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வருவதால் இப்போதைக்கு அந்த பேச்சுக்கே இடமில்லை என்றும் திருமணம் கிடையாது, அறிவிப்பும் கிடையாது என்று எக்கச்சக்க கண்டீசன் போட்டிருக்கிறார்.
இதனால் விஜய் தேவரகொண்டா கடுமையாக கோபத்தில் இருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.