ஏமாற்றிய காதலர்கள்..விவாகரத்து!! எமனாக மாறிய ராஜவம்சத்து நடிகையின் கண்ணீர் கதை..
மனிஷா கொய்ராலா
1970 ஆகஸ்ட் 16 ஆம் தேதி நேபாள் தலைநகர் காட்மண்ட்டுவில் பிரகாஷ் கொய்ராலா - சுஷ்மா கொய்ராலாவிற்கு மகளாக பிறந்தவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா. நேபாளத்தை பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த அரச குடும்பம் தான் மனிஷாவின் குடும்பம். பள்ளிப்படிப்பை நேபாளத்தில் படித்த மனிஷா, மேல் படிப்பை டெல்லி பப்ளிக் ஸ்கூலில் படித்து பின் நியூயார்க் சென்று பிலிம் மேக்கிங் டிப்ளமோ பட்டம் பெற்றார்.

மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்த மனிஷா கொய்ராலா, 1989ல் ஃபெரி பெட்டாலா என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் செளடாகர் என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற மனிஷா, 1942 லவ் ஸ்டோரி படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.
இதனையடுத்து, உயிரே, இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். நாநா படேகர், அக்ஷய் குமார், பாலிவுட் இசையமைப்பாளர் சந்திப் சௌவுட்டா, கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய மனிஷா, அவர்கள் என் நண்பர்கள் தான் நான் சிலரை நம்பி ஏமாந்தேன் என்று கூறினார்.

ஏமாற்றிய காதலர்கள்
அதாவது ஆஸ்திரேலியா தூதர் ஒருவரை காதலித்த மனிஷா, அவரை திருமணம் செய்துக்கொள்ள நினைத்த போது, அவர் குறித்து பல உண்மைகள் தெரியவர, அவரைவிட்டு பிரிந்து 2010ல் தன்னைவிட 7 வயது குறைவான சாம்ராட் டஹால் என்ற நேபால் தொழிலதிபரை திருமணம் செய்தார். பின் 2012ல் ஓவரியன் கேன்சர் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். அதே நேரத்தில் கணவரைவிட்டு பிரிந்து கேன்சர் நோயுடன் போராடி வந்தார்.

அமெரிக்காவிற்கு சென்று புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்தார், கீமோ சிகிச்சை செய்ததால் முடி எல்லாம் உதிர்ந்து மொட்டை தலையுடன் உடல் எடை குறைத்து புகைப்படத்தை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்தார். பின் கேன்சர் நோயில் இருந்து மீண்டு வந்த மனிஷா கொய்ராலா, அதற்கான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார். என்னதான் ராஜ குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், பணத்திற்கு குறைவில்லாததாக இருந்தாலும் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்து வந்துள்ளார் மனிஷா கொய்ராலா.