படக்காட்சியில் கட்டிய மூன்று முடிச்சு தாலி.. நடிகர் மீது மோகத்தால் கழட்ட மறுத்த நடிகை..
சினிமாவில் படக்காட்சிகளுக்காக கட்டும் தாலி ஒரிஜினலாகவும் காட்டப்பட்டாலும் அதன்பின் அந்த தாலியை கழட்டிவிடுவார்கள். ஆனால் ஒரு டாப் நடிகை நடிகர் மீது அதீத காதல்வயப்பட்டு அவர் படத்துக்காக கட்டிய தாலியை கழட்டாமல் இருந்துள்ளார்.
90 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்த நடிகருடன் அம்மணி பல படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த நடிகர் மீது ஈர்ப்பு வர அவருடனே ஜோடியாகவும் நடித்தும் வந்தார்.
ரியல் ஜோடிகளாக திருமணம் செய்வார்கள் என்று ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அப்படி நடக்காமல் திருமண வாழ்வில் இணையாமல் போய்விட்டார். ஒரு படத்திற்காக நடிகர் நடிகையின் கழுத்தில் தாலிக்கட்டியிருக்கிறார்.
அந்த தாலி நிஜமாக கட்டப்பட்டதாக நினைத்து தாலியை கழட்டாமல் 6 மாதம் வரை கழுத்திலேயே பொக்கிஷமாக பார்த்து வந்துள்ளார். ஒரு நாள் நடிகையின் தங்கை கழுத்தில் இருந்த தாலியை பார்த்துவிட்டு அம்மாவிடம் கூறியுள்ளார்.
பின் நடிகையின் அம்மாவும் எவ்வளவோ சொல்லியும் அதை கழட்டவே முடியாது என்று கூறியிருக்கிறார். ஆனால் நடிகையிடம் பக்குவமாக கூறி அந்த் தாலியை கழட்டி இருக்கிறார். அந்த நடிகைக்கு அந்த காதல் சினிமா காதலாகவே இருந்துவிட்டது.