71 வயதான நடிகையின் ரூ. 100 கோடி பங்களா!! யார் அந்த நடிகை..
ஜெமினி கணேசஷின் மகளாக இந்திய சினிமாவில் டாப் நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரேகா. 4 வயதில் நடிக்க ஆரம்பித்த நடிகை ரேகா, சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தார்.

15 வயதில் 'தோ ஷிகாரி' படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்த ரேகா, வங்காள மொழி சூப்பர் ஸ்டார் பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு ஜோடியாக 32 வயதில் நடித்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸி நடிகையானார்.
தற்போது 71 வயதாகும் நடிகை ரேகாவின் பாந்த்ராவில் உள்ள கடல் நோக்கிய பங்களாவான பசேரா பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வீட்டில் சிற்பங்கள், பழங்கால விளக்குகள், இருண்ட மர வேலைப்பாடுகள், பித்தளையால் பதிக்கப்பட்ட தளபாடங்கள், கைத்தறி திரைச்சீலைகள் மறும் பழங்கால கண்ணாடிகள் போன்றவற்றை காணலாம். இந்த பங்களாவின் மதிப்பு கிட்டத்த ரூ. 100 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
