ஒருவழியாக அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய மாளவிகா மோகனன்.. மகிழ்ச்சியில் நடிகை!

Malavika Mohanan Tamil Cinema Actress
By Bhavya Nov 15, 2025 12:30 PM GMT
Report

மாளவிகா மோகனன்

இந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.

இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த தங்கலான் படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசரவைத்தார்.

ஒருவழியாக அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய மாளவிகா மோகனன்.. மகிழ்ச்சியில் நடிகை! | Malavika Wish After 10 Years Details

மகிழ்ச்சியில் நடிகை! 

இந்நிலையில், மாளவிகா அவரது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அம்மாவின் 10 வருட மனக்குமுறலை ஒருவழியாக தீர்த்துவிட்டதாகவும், அவரின் ஆசையும் நிறைவேறி விட்டதாக கூறியுள்ளார்.

அதாவது பத்து வருடத்திற்கு முன்பு, ஒருமுறை மாளவிகா மோகனன் தன்னுடைய அம்மாவுடன் பாரிஸுக்கு வந்தாராம். அந்த நேரத்தில் மழை கொட்டி தீர்த்ததால், ஹோட்டலில் அறையை விட்டு எங்குமே செல்லமுடியாமல் போனதாம்.

தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அம்மாவுடன் பாரிஸுக்கு சென்று அங்கு அம்மாவை அவருக்கு பிடித்த பல இடங்களுக்கு அழைத்து சென்று அவரின் ஆசையை நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளார்.