28 வயதில் பறிபோனவாழ்க்கை..4 நாட்களில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போன சந்திரமுகி பட நடிகை..
விநயா பிரசாத்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்தில் நடிகர் நாசரின் மனைவியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை விநயா பிரசாத். கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த விநயா பிரசாத், முதலில் வாய்ஸ் அர்ட்டிஸ்ட்டாக தனது கலைப்பயணத்தை தொடங்கினார்.

பி.காம் பட்டதாரியான விநயா, கர்நாடக இசையிலும் தேர்ச்சி பெற்றவர். 90-களில் தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக மலையாளம், கன்னட திரைப்படங்களில் மிக முக்கிய நடிகையாக திகழ்ந்து வந்தார்.

கன்னடத்திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக இருந்த விநயா, பெருந்தச்சன் என்ற மலையாள படத்தில் நடிக்க ஆரம்பித்து, மணிச்சித்திரத்தாழ் படத்தின் மூலம் மிகப்பெரிய இடத்தினை பிடித்தார். பின் ஸ்த்ரீ என்ற மெகா தொடரில் இந்து என்ற ரோலிலும் நடித்தார். எடிட்டர் பிரசாத் என்பவரை திருமணம் செய்தார் விநயா. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 28 வயதாக விநயா இருக்கும்போது அவரது கணவர் காலமானார்.

கணவர் இறந்த நான்கே நாட்களில் அவர் மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பினார். அப்படியிருக்கையில் அவர் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தால் மீண்டுவர முடியாது என்பதால், தன்னுடைய மகளின் எதிர்காலத்திற்காக தைரியமான முடிவை எடுத்தார். அந்நேரத்தில், பலர் அவரை விமர்சித்தாலும் அவரது கடமையில் உறுதியாக இருந்தார்.

தன்னுடைய குடும்பப்பொறுப்பு மற்றும் கைக்குழந்தையின் எதிர்காலத்திற்காக அவர் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பினார். தன் மகளுக்கு 14 வயதாகும்போது, விநயா பிரசாத், ஜோதி பிரகாஷ் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.
ஆரம்பத்தில் மகளுக்கு பிடிக்காவிட்டாலும் பின் நிலைமையை சரி செய்தனர். திருமணத்திற்கு பின்கூட தன்னுடைய முதல் கணவரின் பெயரான பிரசாத் என்பதை மாற்றக்கூடாது என்பதில் விநயா உறுதியாக இருந்தார்.