12-வது படிக்கும் போது சினிமா! நான் எடுத்த தவறான முடிவு இதுதான்! தன் மகள் பற்றி கூறிய நடிகை ரேவதி..

தமிழ் சினிமாவில் கேரள நடிகைகள் பலர் அறிமுகமாகிய சம்பத்தில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரேவதி. நடனமாடுவதில் ஆர்வம் கொண்ட டாக்டர் ஆகவேண்டும் என்ற ஆசை இருந்ததாம். 12 வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் ரேவதியை மண்வாசனை படத்தில் பாரதிராஜா படத்தில் நடிக்க கேட்டுக்கொண்டுள்ளார். அதை வேண்டாம் ஒதுக்கியதும் குடும்பத்தினரால் அப்படத்தில் நடித்து வந்தார்.

முதல் படத்தில் ஆரம்பித்த போது நடிகர் பாண்டியன் கன்னத்தில் அடித்தது நான் மறக்கமுடியாத ஒன்று என்றும் கூறியுள்ளார். ரஜினி, கமல் என ஒரே நேரத்தில் ஆரம்பகட்ட சினிமாவில் நடித்துள்ளார் ரேவதி. 20 வயதில் மூத்த நடிகை என பெயரை பெற்று முன்னணி இயக்குநர்கள் படங்களில் நடித்து வந்தார்.

பின் சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்து சில கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து பெற்றார். 43 வயதிருக்கும் போது தன்னுடைய பெண் குழந்தையை பெற்றார். என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு கல்யாணம் தான். அப்போதே யோசித்து முடிவெடுத்திருந்தால் நல்ல படங்களில் நடித்து வந்திருப்பேன்.

சமுகத்தில் நல்லது செய்ய 6 வருடம் அரசியலிலும் இருந்தேன். ஆனால் அது எனக்கு பொறுத்தமான களம் இல்லை என்று முடிவெடுத்து வெளியே வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார் நடிகை ரேவதி. 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்