ஆம்பள கூப்பிடத்தான் செய்வான் நீ தான் கரெக்ட்-ஆ இருக்கனும்!! சீரியல் நடிகை ரிஹானா..
ரிஹானா
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை ரிஹானா. பல சீரியல்களில் நடித்து வரும் ரிஹானா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், எப்படியாவது சீரியலில் ஜெயிக்க வேண்டும், பிரபலமாக வேண்டும், வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்று நினைக்கும் பெண்களை தான் அவர்கள் குறி வைக்கிறார்கள்.
இதுபோல் ஒரு கும்பல் சுற்றி வருகிறது. உங்களுக்கு ஒரு சிறிய ரோல் கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொண்டு நடிக்க வேண்டும். உங்கள் திறமையை படக்குழுவினர் பார்த்து, அவர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள். ஆனால் உடனடியாக பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்து இப்படியான கும்பலிடம் சிக்கிவிட வேண்டாம். யாராவது உங்களிடம் அத்துமீறினால் அதை எதிர்த்து கேடும் தைரியம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியிருக்கிறார்.
ஆம்பள கூப்பிடத்தான் செய்வான்
மேலும் சினிமாவில் மட்டுமில்லை எல்லா துறைகளிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கிறது. நீங்கள் நடிக்க வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு துணையாக யாரையாவது கூட்டிக்கொண்டு போங்கள். சில ஆம்பளைங்க மனசுல அலைபாய விட்டுட்டு திரியிறாங்க, ஆனால் பொண்ணுங்க தான் பொறுப்பா இருந்துக்கணும். நடிகரோ, இயக்குநரோ உங்களை தனியாக காஃபி ஷாப் போலாம்ணு கூப்பிட்டால் என்னால் தனியாக வரமுடியாது என்று சொல்லிவிடுங்கள்.
ஒரு பெண் தனியாக இருக்கிறார் என்று தெரிந்தாலோ அல்லது இந்த பெண்ணை எப்படியாவது தனக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கும் சில ஆண்கள் பெண்களுக்கு ஏதாவது தொல்லைகள் கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள். அதை ஒரு பெண் வெளியே சொல்கிறார் என்றால் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. ஆம்பள கூப்பிடத்தான் செய்வான் நீ தான் கரெக்ட்-ஆ இருக்கனும் என்று கூறியுள்ளார்.