விஜய் படத்தில் ரொமான்ஸ் செய்த 44 வயது நடிகையா இது? வைரலாகும் குத்தாட்ட போட்ட வீடியோ

vijay master isha koppikar vaathicoming
By Jon Mar 29, 2021 11:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வேற்று மொழி பேசும் நடிகைகள் அதிகரிப்பது 90களில் ஆரம்பித்து தற்போது வரை நீட்டித்து வருகிறது. அப்படியாக நடிகர் அரவிந்த் சாமி நடித்து 199ல் வெளியான என் சுவாசக்காற்றே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இஷா கோபிக்கர். இதையடுத்து நடிகர் விஜய்யின் நெஞ்சினிலே, பிரசாந்தின் ஜோடி படத்தில் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானார்.

இந்தி, கன்னடம், தெலுங்கு என ஆரம்பித்து கேரியரை ஆரம்பித்த இஷா கோப்பிகர் டிம்பி நராங் என்பவரை திருமணம் செய்து செட்டிலானார். இதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்த இஷா பல படங்களில் நடித்து வந்தார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் படமான அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு முன் விஜய் படத்தின் கதாநாயகிகளான ஜெனிலியா, ஷில்பா செட்டி உள்ளிட்டவர்கள் அந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டனர்.

அந்தவீடியோக்கள் ரசிகர்களிடையேயும் இணையத்திலும் வைரலானதை தொடர்ந்து இஷா கோப்பிகர் வெளியிட்ட வீடியோ டிவிட்டர் பக்கத்தில் 80 ஆயிரம் பார்வையாளர்களை பெற்று டிரெண்ட்டிங்கில் உள்ளது.