39 வயதாகியும் திருமணத்தை வெறுத்து ஒதுக்கும் நடிகை சதா!! காரணம் இதுதானாம்..
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகை சதா. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
தற்போது வாய்ப்பில்லாமல் கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சதாவின் கேரியர் உடைய காரணம் வடிவேலுவுட்ன எலி படத்தில் ஜோடியாக நடித்தது தான். அப்படி சினிமாவை தாண்டி சதா ஓட்டல் பிசினஸ் செய்து வந்துள்ளார்.
ஆனால் சில பிரச்சனையால் அந்த தொழிலை மூடும் நிலைக்கு வந்ததாக கூறி வீடியோ வெளியிட்டு அழுதிருந்தார். இந்நிலையில் மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பிக்க போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் 39 வயதாகியும் நடிகை சதா ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். திருமணம் செய்தால் சுதந்திரத்தை இழக்கிறோம்.
அந்த பந்தத்தில் புரிதலும் ஏற்படலாம் ஏற்படாமலும் போகலாம். என்னுடைய ஆசைகளை திருமணம் செய்தால் அதை தொடரமுடியாது.
சமீபத்தில் பல திருமணங்கள் தோல்வியில் முடிந்து பிரிந்து செல்கிறார்கள் என்றும் அதனால் தான் தனக்கு திருமணம் எண்ணம் தோன்றவில்லை என்றும் நடிகை சதா தெரிவித்துள்ளார்.