இயக்குனருடன் நெருக்கமான காட்சி... நடிகையின் மாதவிடாய் தேதியை கேட்ட நயன் தாரா பட வில்லன்!!
பாலிவுட் சினிமாவில் டாப் இயக்குனராக திகழ்ந்து வருபவர் அனுராக் காஷ்யப். தமிழில் நயன் தாராம் அதர்வா, விஜய் சேதுபதி, ராஷிகண்ணா உள்ளிட்ட பல நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் ரோலில் நடித்து பிரபலமானார்.
தற்போது லியோ படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார். பல சர்ச்சைகளில் சிக்கி வந்த அனுராக் தற்போது இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை அம்ருதா சுபாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அனுராக் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
அனுராக் காஷ்யப்புடன் ஸ்கேர்டு கேம்ஸ் 2 வில் நடித்திருந்தேன். ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அப்படத்தில் அவருடன் முதல் முறையாக நெருக்கமான காட்சியில் நடித்திருந்தேன்.
அப்போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்படுவராக இருந்தார் என்றும் நெருக்கமான காட்சி எடுக்கும் ஷூட்டிங் நேரத்தில் எனக்கு சரியான தேதிகளில் அமைக்க உதவும் வகையில் அவரே என்னிடம் வந்து மாதவிடாய் தேதியை கேட்டறிந்தார் என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த சமயத்தில் உங்களால் அந்த காட்சியில் நடிக்க முடியுமா என்றும் அனுராக் தன்னுடம் கேட்டதாக கூறியிருக்கிறார் அம்ருதா சுபாஷ். சமீபத்தில் நடிகை அம்ருதா லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.