10 ஆண்டுகளாக காணாமல் போன சரத்குமார் பட நடிகை சாக்ஷியா இது.. இப்படி ஆளே மாறிட்டாங்க..
தமிழ் சினிமாவில் வட இந்திய நடிகைகள் பலர் அறிமுகமாகி ஒருசில படங்களில் மட்டும் நடித்து அதன்பின் வாய்ப்பில்லாமல் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போய்விடுவார்கள். அந்தவரிசையில் இருப்பவர் தான் நடிகை சாக்ஷி சிவானந்த். மும்பையில் பிறந்த நடிஅகி சாக்ஷி, தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அதன்பின், இந்தி, மலையாள மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.
90ஸ் காலக்கட்டத்தில் அறிமுகமாகிய நடிகை சாக்ஷி தமிழில் மம்மூட்டி, அரவிந்த் சாமி நடித்த புதையல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் வாய்ப்பில்லாம் சில ஆண்டுகள் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி டாப் நடிகையாகினார்.
பின் விஜயகாந்தின் வாஞ்சிநாதன், அர்ஜுனின் வேதம், சரத்குமாரின் மானஸ்தன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஆதி பகவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
இதன்பின் 2016 சாகர் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகி குழந்தைகளை பெற்றெடுத்தார். தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.