3 நிமிஷத்துக்கு 5 கோடி!! ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா ஆட அந்த நடிகர் தான் காரணம்...
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா, சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்து படங்களில் நடித்து வருகிறார்.
விவாகரத்துக்கு பின் மன சோர்வு மட்டுமில்லாமல் உடல் அளவிலும் சில சவால்களை சந்தித்தார். அப்படி இருந்த போதிலும் கமிட்டாகிய படங்களில் நடித்து வந்த சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோயின் தாக்கத்தால் கஷ்டப்பட்டு வந்தார்.
அதற்காக சிகிச்சை பெற்றும் படங்களில் நடித்தும் வந்த சமந்தா புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் வேறவெவலில் கவர்ச்சியாட்டம் போட்டார். இந்தியா முழுவதையும் திரும்பி பார்க்க வைத்த சமந்தாவை பார்க்கவே அப்படத்தை பார்க்க கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஆட்டம் போட சமந்தாவை நடிகர் அல்லு அர்ஜுன் தான் ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறாராம்.
3 நிமிட பாடலுக்கு நடனமாட சுமார் 5 கோடி சம்பளமாகவும் கொடுக்கப்பட்டது. மேலும் பாடலில், கிளாமராக அங்கங்களை அசைத்து ஆடும் நடன அசைவுகளை கருத்தில் கொண்ட சமந்தா, அந்த பாடலில் கொடுக்கப்பட்ட எந்த ஸ்டெப்பையும் மாற்றவே சொல்லவில்லையாம்.