சினிமாவில் புதிய ட்ரெண்டை உருவாக்கிய சமந்தா.. இது நல்ல இருக்கே
சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
நடிப்பு, தொழில் என பிஸியாக நடித்து வந்தவர் தற்போது தயாரிப்பு பக்கமும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில், நடிகை சமந்தா கடந்த 2023-ம் ஆண்டு ’திரலாலா மூவிங் பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் தான் பங்காரம். இப்படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார்.
புதிய ட்ரெண்ட்
இந்நிலையில், சமந்தா சினிமாவில் பாலின பாகுபாடு இல்லாமல் சம்பளம் வழங்கியதாக இயக்குநர் நந்தினி தெரிவித்துள்ளார்.
அதாவது, தற்போது சமந்தா அவரது தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் அனைவருக்கும் சமமாக சம்பளம் வழங்கி இருக்கிறாராம். இது போன்று இந்திய சினிமாவில் நடப்பது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.