திருமணத்திற்கு பின் சமந்தாவின் ஹனிமூன் பிளான்.. கணவருடன் ரொமான்டிக் டிரிப் எங்கே?
சமந்தா
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சொந்த திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பெரிய இடத்தை பிடித்தவர் சமந்தா.
கடைசியாக சமந்தா தெலுங்கில் நடித்த குஷி திரைப்படம் வெளியானது, பின் Citadel Honey Bunny என்ற வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது. புதிய தயாரிப்பு நிறுவனம், போட்டோ ஷுட், சொந்த தொழில் கவனிப்பது என பிஸியாக உள்ளார்.
டிரிப் எங்கே?
இந்நிலையில், சமந்தா ராஜ் நிடிமோருவை சமீபத்தில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணமான உடனேயே ஹனிமூன் செல்லாமல் படப்பிடிப்பில் பங்கேற்றதால், ரசிகர்கள் அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டினர்.

சமந்தா-ராஜ் திருமணத்திற்குப் பிறகு, அவர்களின் ஹனிமூன் குறித்து பல செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்ததும் ஐரோப்பாவில் உள்ள ரொமான்டிக் இடங்களுக்கு நீண்ட பயணம் செல்ல இந்த ஜோடி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.