சமந்தா சமீபத்தில் அணிந்திருந்த நெக்லஸ் விலை இத்தனை லட்சமா?

Samantha
By Yathrika Mar 06, 2025 04:30 AM GMT
Report

சமந்தா

தமிழ் சினிமா ரசிகர்கள் பல்லாவரத்து பொண்ணு என செல்லமாக கொண்டாடும் நாயகி சமந்தா.

தனது கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் நடிகர்களுடன் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தார். ஆனால் அவரது முன்னேற்றத்திற்கு ஒரு பிரச்சனையாக அவருக்கு ஏற்பட்ட நோய் இருந்தது.

மயோசிடிஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமந்தா இப்போது மீண்டும் பழைய நிலைமைக்கு வருகிறார்.

சமீபத்தில் அவர் தனது 15 வருட சினிமா பயணம் குறித்து பதிவிட்டு புடவையில் எடுத்த போட்டோவை வெளியிட்டார். அதில் அவர் அணிந்திருந்த Necklace விலை ரூ. 5.56 லட்சம் என்றும் மோதிரம் விலை ரூ. 1.43 லட்சம் என்றும் கூறப்படுகிறது.

சமந்தா சமீபத்தில் அணிந்திருந்த நெக்லஸ் விலை இத்தனை லட்சமா? | Actress Samantha Latest Jewel Set Prize Details