ரகசியமாக நடக்கும் நடிகை சம்யுக்தாவின் திருமண ஏற்பாடு.. இணையத்தில் உலா வரும் தகவல்
Actress
Samyuktha
By Karthick Raja
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சம்யுக்தா. இவர் நடிப்பில் வெளிவந்த வாத்தி, விருபாக்ஷா ஆகிய படங்கள் மாபெரும் அளவில் வெற்றிபெற்றன.
பிஸியாக அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வரும் நடிகை சம்யுக்தா குறித்து திடீரென இணையத்தில் ஒரு செய்தி உலா வருகிறது.

வேறு ஒன்றும் இல்லை வழக்கம் போல் பிரபலங்கள் பற்றி வைரலாகும் திருமண செய்திதான். டாப் நாயகியாக வலம் வரும் சம்யுக்தாவிற்கு ரகசியமாக திருமண ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதற்கு முன் திருமணம் பற்றி நடிகை சம்யுக்தாவிடம் கேட்டபோது, 'இப்போது எனது கவனம் முழுவதும் நடிப்பில் தான்' என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
