'என் கல்யாணத்தை பார்க்க அப்பா இல்லையே'.. கண்கலங்கிய நடிகை சங்கீதா!!

Indian Actress Tamil Actress Actress Redin Kingsley
By Dhiviyarajan Jun 17, 2024 11:13 AM GMT
Report

பிரபல காமெடி நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. கடந்த ஆண்டு இவர் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் இருவரும் பிசியாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சங்கீதா, அவர் அப்பாவை பற்றி எமோஷனலாக பேசியுள்ளார்.

அதில் அவர், என்னுடைய அப்பாவுக்கு மார்பு வலி இருந்தது ஆனால் அதை வெளிய சொல்லவில்லை. நானும் அம்மாவும் வெளியே செல்ல போது தண்ணீர் பாட்டில், பேக்கை கையில் எடுத்துக்கொடுத்து, டாடா காட்டி அனுப்பி வைத்தார்.

நாங்கள் சென்ற பிறகு அவருக்கு வலி அதிகமாகி இருக்கிறது. நாங்கள் வருவதற்குள் அப்பா இறந்துவிட்டார்.என்னுடைய கல்யாணத்தை பார்க்க அப்பா இல்லையே என்கிற வருத்தம் இருக்கிறது என்று சங்கீதா குறியுள்ளார்.