தனுஷ் மேனேஜர் அப்படி கேட்டாங்க..இத அவர் மாத்திக்கணும்!! சீரியல் நடிகை பகீர் தகவல்...
நடிகர் தனுஷ்
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் வரை தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி புகழப்பட்டு வருபவர் தான் நடிகர் தனுஷ். ராஞ்சனா, ஷமிதாப், அட்ராங்கி ரே போன்ற படங்களை தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மே' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், சீரியல் நடிகை ஒருவர் தனுஷ் பற்றி பகிர்ந்துள்ள தகவல் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

சன் டிவியில் ஒளிப்பரப்பான வானத்தைப் போல சீரியலில் நடித்து பின் அன்னம், மருமகள் போன்ற சீரியலில் நடித்து வரும் நடிகை மான்யா ஆனந்த் தான் தனுஷ் பற்றிய ஒரு விஷயத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
நடிகை மான்யா
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், தனுஷின் டீமில் இருந்து ஸ்ரேயாஸ் என்பவர் எனக்கு மெசேஜ் செய்தார். என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு, பண்றீங்களான்னு கேட்டார். சரி உங்களுடைய டிமாண்ட் என்ன என கேட்டார். அதற்கு நான், ரொம்ப ஓவர் கிளாமரா இருந்தாலும் நடிக்கமாட்டேன், ரொம்ப ரொமாண்டிக்காக இருந்தாலும் நடிக்கமாட்டேன். எனக்கு டீசண்ட்டான கேரக்டர் இருந்தால் நடிப்பேன் என்று சொன்னேன்.

மேனேஜர்
தனுஷ் சார் படமாக இருந்தாலும் பண்ண மாட்டீங்களான்னு கேட்டார், நான் யார் படமாக இருந்தாலும் பண்ணமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அடுத்ததாக கமிட்மெண்ட் இருக்கும்னு சொன்னாங்க, அப்படினா என்னன்னு கேட்டேன். ஹீரோக்கூட கமிட்மெண்ட் இருக்கும்னு சொன்னார். நான் அதெல்லாம் பண்ணமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.
பின் சிலநாள் கழித்து இதேபோல் இன்னொரு மேனேஜரிடம் இருந்து எனக்கு மெசேஜ் வந்தது. அவரும் தனுஷ் படத்தில் நடிக்க சான்ஸ் தருவதாக கூறியது மட்டுமின்றி ஸ்கிரிப்ட்டையும் எனக்கு அனுப்பினார். நான் அதை படிக்கவே இல்லை, அந்த நபர் உண்மையிலேயே தனுஷின் மேனேஜர் தானா என்பது தெரியவில்லை, ஆனால் இதுபோல் நிறைய நடக்குது.

இதுகுறித்து தனுஷுடன் வேலை பார்த்த என்னுடைய சக நடிகையிடம் நான் சொன்னேன். அதற்கு அவர், இது தனுஷுக்கே தெரியாமல் நடக்கலாம் என்று சொன்னார். ஆனால் எனக்கு உண்மை எது என தெரியவில்லை. எனக்கு மட்டுமில்லை, நிறைய நடிகைகளுக்கு இதுபோல் நடந்து இருக்கிறது. இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று நடிகை மான்யா கூறியிருக்கிறார்.