கணவர் கிரிஷ் பெயரை நீக்க இதான் காரணம்!! விவாகரத்து வதந்திக்கு பதிலடி கொடுத்த சங்கீதா..
நடிகை சங்கீதா
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. பின்னணி பாடகர் கிரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தன்னைவிட கணவருக்கு சிறிய வயது என்று செய்திகள் வெளியான நிலையில், என்னைவிட கிரிஷ் தான் வயதில் மூத்தவர் என்று கூறினார்.
இந்நிலையில் சங்கீதாவை சுற்றி புதிய சர்ச்சை தற்போது ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சங்கீதாவுக்கும் கணவர் கிரிஷுக்கும் சில மாதங்களாகவே மனஸ்தாபம் இருப்பதாகவும் அந்த மனஸ்தாபம் குடும்பத்திற்குள் இருந்து எழுந்திருக்கலாம், அவர் தனது கணவர் கிரிஷ்ஷை பிரியப்போவதாகவும் பேச்சுக்கள் எழுந்திருக்கிறது.
வதந்திக்கு பதிலடி
தன் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் பெயரை சங்கீதா கிரிஷ் என்பதை Sangeetha Act என்று மாற்றியிருக்கிறார். அப்படி அவர் மாற்றியதால் தான் இருவருக்கும் விவாகரத்து என்ற பேச்சுக்கள் எழ ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் பரவி வரும் வதந்திகள் குறித்து நடிகை சங்கீதா விளக்கம் கொடுத்துள்ளார். அதில், தன் கணவர், பாடகர் கிரிஷை விவாகரத்து செய்யப்போவதாக வரும் செய்திகள் தவறானது. நியூமராலஜிக்காக இன்ஸ்டாகிராமில், பெயருக்கு பின்னால் இருந்த கிரிஷ் பெயரை நீக்கியதாக தெரிவித்துள்ளார் நடிகை சங்கீதா.