18 வயசுல வரசொல்லிட்டு வேற நடிகையை கூப்பிட்ட இயக்குனர்!! உண்மையை உடைத்த நடிகை சரிதா..
80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சரிதா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சரிதா திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகி குழந்தைகளை பார்த்து வருகிறார். கணவரை விவாகரத்து செய்துவிட்டு வெளிநாட்டில் மகன்களுடன் செட்டிலாகிய சரிதா பல ஆண்டுகள் கழித்து தமிழில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் அம்மா ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். அப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்துள்ள சரிதா, சில சினிமா அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வேதம் புதிது என்ற படத்தில் நடித்துள்ளார் சரிதா. அப்படத்தின் ஆடிஷனுக்கு 18 வயதில் சென்றேன். ஏசி ரூமில் தான் ஊட்டியில் லுக் டெஸ்ட் நடந்தது. மேக்கப் இல்லாமல் பல படங்களில் நடித்திருந்தேன். உதவி இயக்குனராக வெற்றிமாறன் வேலை செய்திருந்தார்.
பாரதிராஜா சார் படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று உடனே ஓகே சொன்னேன். படத்தில் ஆப்போசிட் ரோல் யார் என்று கேட்டதற்கு 15 வயசுல தான் பார்த்திட்டு இருக்கோம்னு சொன்னாங்க.
ஆனால் செட்டில் பார்க்கும் போது நடிகை அமலா உட்கார்த்திருக்காங்க. நான் ஒரு கதையை கேட்டு ஓகே சொல்லிட்டேனா என்னால எந்த பிரச்சனையும் வராது. நான் வயதானவர் போல் காமிக்க முகத்தில் மேக்கப் போட்டு ஏதேதோ பண்ணாங்க.
முக்கிய ரோலில் நடிப்பதாக நினைத்து வேறு கதாபாத்திரத்தில் கொடுத்ததால் ஏற்க முடியாமல் போனது என்று கூறியிருக்கிறார் நடிகை சரிதா.