திருமணமாகி ஒரே வருடத்தில் 2 - வது திருமணம்!! லப்பர் பந்து நடிகை செய்த அதிர்ச்சி செயல்
சுவாசிகா
கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று லப்பர் பந்து. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவியாக நடித்து பிரபலமானவர் சுவாசிகா.
இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இதுதான் இவருடைய முதல் படம் என பலரும் நினைத்துக்கொண்டனர்.
இவர் பல வருடங்களுக்கு முன்பே வைகை, கோரிப்பாளையம், சாட்டை ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஆனால், இந்த படங்கள் எல்லாம் சுவாசிகாவிற்கு பேர் சொல்லும் அளவிற்கு வெற்றி கொடுக்கவில்லை.
தற்போது, லப்பர் பந்து படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு பின் பல தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதிர்ச்சி செயல்
சுவாசிகா மோதலும் காதலும் என்ற சீரியலில் நாயகனாக நடித்து பிரபலமான பிரேம் ஜேக்கப் என்பவரை கடந்த ஆண்டு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஜோடிக்கு திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு அதை வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார்கள். அதாவது மீண்டும் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.