23 வயதிலேயே உயிரிழந்த தங்கை? நடிகை ஷகிலா தங்கச்சி விஜய்யுடன் ஆடியிருக்காரா!!
பிரபல தொலைக்காட்சி சேனலில் மக்கள் மத்தியில் கடந்த மூன்று சீசன்களாக நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
5 போட்டியாளர்கள் ஸ்ருதிகா, தர்ஷன், முத்துக்குமார், வித்யுலேகா, அம்மு அபிராமி போன்றவர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். இதனை இந்தவாரம் செலெஃபிரேட் செய்ய முன்னாள் போட்டியாளர்கள், கனி, தீபா, பவித்ரா, ஷகீலா, ரித்திகா பொன்றவர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் சில கோமாளிகளும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். நேற்றைய சனிக்கிழமை எபிசோட்டில் கலந்து கொண்ட ஷகீலா தன் மறைந்த தங்கையை பற்றி கூறி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளார்.
கோமாளியாக இருக்கும் ஷீத்தலையை என் தங்கையாக பார்ப்பதால் தான் இந்த சீச்னை பார்க்கிறேன். என் தங்கையின் பெயரும் சீத்தலை தான். அவரும் ஒரு நடிகை. விஜய்யுடன் பம்பாய் காரி என்ற பாடலுக்கு நடனமாடியும் ஒருசில படங்களில் நடித்தும் இருந்தார் என்று கூறியுள்ளார்.
மேலும் 23 வயதிலேயே என் தங்கை உயிரிழந்துவிட்டால் என்று கூறி உருகவைத்திருக்கிறார்.


