பத்தாயிரம் காசு கேட்டதுக்கு KR வத்சலா செஞ்ச விஷயம்!! நடிகை சாந்தி வில்லியன் ஓப்பன் டாக்..
நடிகை சாந்தி வில்லியம்ஸ்
தமிழ், மலையாளம் மொழிப் படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை சாந்தி. முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஹிட் சீரியல்களில் முக்கிய ரோலிலும் நடித்து வந்த நடிகை சாந்தி, ஒளிப்பதிவாளர், வில்லியம்ஸ் என்பவரை காதலித்து 1979ல் திருமணம் செய்து கொண்டார்.
4 குழந்தைகளை பெற்றெடுத்த சாந்தியின் கணவர் வில்லியம்ஸ், உடல்நலக்குறைவால் 2005ல் மரணமடைந்தார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் சாந்தி, நடிகை கேஆர் வத்சலா பற்றி சில தகவலை பகிர்ந்துள்ளார்.
KR வத்சலா
நான் வதசலாவிடம் 10 ஆயிரம் காசு கேட்டபோது இப்போது இல்லை என்று கூறிவிட்டார். அதன்பின் 4 நாட்கள் கழித்து எனக்கு ஃபோன் செய்து என் வீட்டிற்கு வா என்று கூப்பிட்டார். நான் சென்றபோது வத்சலா வீட்டில் இல்லை என்று கால் செய்தேன். வெளியில் வந்திருக்கிறேன், கதவு பக்கம் ஒரு கவரில் காசு வைத்திருக்கிறேன் என்று கூறினார்.
அதை திறந்து பார்க்க காசு நிறைய இருந்தது. அதுபற்றி கேட்டதும் அது உனக்கு தான் எனக்கு வந்ததில் பாதி உனக்கு தான், நீ என் தங்கச்சி, என்ன பிரச்சனையோ அதை பாரு என்று கே ஆர் வத்சலா கூறியதாக நடிகை சாந்தி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.