போதை பொருள் கலந்த ஜூஸ்! படுக்கையில் ஆடையில்லா பெண்!! மகாபாரதம் சீரியல் நடிகை ஓப்பன்..
சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு எதிராக பாலியல் தொல்லை ஏற்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. அதனை தற்போது கோலிவுட்டில் மீடூ ஹாஷ்டேக் மூலம் பாடகி சின்மயில் பயன்படுத்தி வருகிறார்.
இதனால் பல நடிகைகள் முன்வந்து தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். தற்போது இந்தி நடிகை ரத்தன் ராஜ்புத் என்ற நடிகை பாலியல் சீண்டல் தனக்கு நடந்தது பற்றி விவரித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற மகாபாரதம் சீரியலில் அம்பை ரோலில் நடித்தவர் தான் நடிகை ரத்தன் ராஜ்புத்.
நடிகை தேர்வு நடப்பதாக சொல்லப்பட்ட ஒரு இடத்திற்கு என் ஆண் நண்பவருடன் சென்றிருந்தேன். அங்கு சென்றது எனக்கான காட்சியை கூறி நடித்துக்காட்ட சொன்னார்கள். நானும் நடித்துக்காடியதை பார்த்து பாராட்டினார்கள்.
அதன்பின் எனக்கு குடிக்க ஜூஸ் ஒன்றினை கொடுத்தார்கள். ஆனால் அதில் போதை பொருள் கலந்திருப்பதை சுதாரித்து அதை கீழே வைத்துவிட்டேன். பின் என்னை அருகில் இருந்த அறைக்கு கூட்டிச்சென்றனர்.
அங்கு அறை முழுவதும் ஆடைகள் இருந்து, ஒரு பெண் மது போதையில் ஆடையின்றி இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். என்னை பார்த்து நண்பருடன் ஏன் வந்தாய் என்று கத்தினது அங்கிருந்து நானும் என் நண்பரும் தப்பியோடிவிட்டோம் என்று நடிகை ரத்தன் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.