குஷ்பு இட்லிக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கிறதா...
Khushbu
By Yathrika
நடிகை குஷ்பு
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நாயகிகளிவ் ஒருவர் தான் குஷ்பு. இவர் தமிழே சுத்தமாக தெரியாமல் நடிக்க வந்தாலும் விரைவில் மொழியை தெரிந்துகொண்டு தனது சொந்த குரலிலேயே டப்பிங் எல்லாம் செய்து வந்தார்.
இந்த ஒரு விஷயத்திற்காகவே அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன என்றே கூறலாம். அண்மையில் ஒரு பேட்டியில் குஷ்பு இட்லி பெயர் எப்படி ஆரம்பித்தது என்ற விஷயத்தை கூறியுள்ளார்.
அதில் அவர், தர்மத்தின் தலைவன் படத்தின் போது எல்லோரும் வாடா போடா என பேச நானும் அது நல்ல வார்த்தை என ரஜினியை வாடா என கூப்பிட்டேன். அதைக்கேட்டதும் பிரபு உடனே ரஜினியை அப்படியெல்லாம் கூப்பிட கூடாது, என்ன வார்த்தை என புரிய வைத்தார்.
அதன்பின் எனது கன்னத்தை கிள்ளி இட்லி போலவே இருக்கிறது என கூற அப்படி தான் குஷ்பு இட்லி உருவானது என கூறியிருக்கிறார்.