90ஸ் கிட்ஸ்களின் கனவுக் கன்னி நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு சொத்தா?
சிம்ரன்
நடிகை சிம்ரன் சனம் ஹர்ஜாய் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். விஐபி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவருக்கு முதல் படமே செம ஹிட் கொடுத்தது.
அடுத்து விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் படத்தில் நடித்தார். அதன் பின், விஜய் உடன் துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே போன்ற பல படங்களில் நடித்தார்.
இவர் விஜய் உடன் நடித்த படங்கள் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படங்களாக இருக்கின்றன. சிம்ரன் திருமணம் ஆகி செட்டில் ஆன பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
சமீப காலமாக ஒரு சில படங்களில் குணச்சித்திர ரோல்களில் மட்டும் அவரை பார்க்க முடிகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இன்று நடிகை சிம்ரன் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இவ்வளவு சொத்தா?
இந்நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சிம்ரனுக்கு மொத்தம் ரூ. 60 கோடி முதல் ரூ. 80 கோடி வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.