ECR-ல் ஹோட்டல் பிசினஸ்!! பிரியா பவானி சங்கரை தொடர்ந்து நடிகை சிம்ரன் ஆரம்பிச்சிட்டங்களே..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சிம்ரன். முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து அனைத்து இளைஞர்களை தன் கட்டுப்பாட்டி தன்னுடைய கவர்ச்சிகரமான நடிப்பால் ஈர்த்து வந்தார். தீபக் என்பவரை திருமணம் செய்து மும்பையில் செட்டிலாகி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்து குணச்சித்திர ரோலிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சிம்ரன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அக்கரை பகுதியில் மெயின் ரோட்டில் சிம்ரனுக்கு சொந்தமான கோட்கா என்ற பெயரில் ஹோட்டல் அமைந்துள்ளது. முதலில் துணிக்கடை பிசினஸ்-ஆக இருந்த அந்த கடையை தற்போது நட்சத்திர ஹோட்டலாக மாற்றியிருக்கிறார் நடிகை சிம்ரன்.
காலை 11 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 வரை இயக்கப்படும் இந்த ஹோட்டலின் மெனு கார்ட்டின் ரேட்டை கேட்டாலே பதறும் அளவிற்கு விலைப் பட்டியல் இருக்கிறதாம். அதாவது இருவர் அமந்து சாப்பிட டேபிள் புக் செய்ய 700 ரூபாய். ஆம்லெட் வகைகள் 400 ரூபாயில் இருந்து ஆரம்பம் ஆகிறதாம்.
அதேபோல் பேபிகர்ன் 280, சிக்கன் லாலிபாப் 280, வருத்த நண்டு 380, சைவ உணவுகளின் காம்போ ஒரு பிளேட்டின் விலை 1000, அசைவ உணவு ஒரு பிளேட் 1500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறதாம். இப்படி பல உணவுகளின் விலை, மெனு கார்ட்டில் நெஞ்சை பதறவைக்கும் அளவிற்கு இருக்கிறதாம்.
இதன்மூலம் தனியாக கல்லா கட்டி வருகிறாராம் நடிகை சிம்ரன். ஏற்கனவே நடிகை பிரியா பவானி சங்கர் ஈசிஆர் பகுதியில் ஹோட்டல் ஆரம்பித்து பணம் சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.