விஷ ஊசி போட்டு கொள்ளுங்க!! மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அங்காடி தெரு நடிகையில் நிலை!!
இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியை கண்ட படம் அங்காடி தெரு. இப்படத்தின் மூலம் அங்காடி சிந்து-வாக பிரபலமானர் நடிகை சிந்து. ஒருசில படங்களிலும் சீரியலிலும் நடித்து வந்த சிந்து சமீபத்தில் பேட்டியொன்றில் தான் படும் கஷ்டங்கள் பற்றி வேதனையுடன் கூறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு தனக்கு மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டு அதற்காக சிகிச்சையும் மேற்கொண்டேன். நாட்டு மருத்துவம், இங்கிலிஸ் மருத்துவம் என எத்தனையோ சிகிச்சை பெற்றும் அதிலிருந்து என்னால் மீள முடியவில்லை. மருத்துவர்களை குறைசொல்லக்கூடாது, அவர்கள் நன்றாகத்தான் பார்த்தார். ஆனால் என் உடல் ஒத்துழைக்கவில்லை.
அதனால் என் மார்ப்பகத்தை அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்டேன். இதன்பின் தஞ்சாவூரில் ஒரு நாட்டு வைத்தியம் மூலம் புண்களை சரி செய்தப்பின் சென்னையில் என் மகளின் கணவர் மரணமடைந்தார். அதற்காக சென்னைக்கு வரவேண்டிய சூழலால் அதன்பின் என்னால் அந்த சிகிச்சை மேற்கொள்ளமுடியவில்லை. அதன்பின் 3 வருடம் என்னை ஓய்வெடுக்க கூறியும் பணக்கஷ்டத்தால் சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன்.
அப்போது எனக்கு என் நண்பர்கள் உதவி இருந்தார்கள். அவர்களும் எத்தனை நாளைக்குத் தான் உதவி செய்ய முடியும். அதனால் தான் மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். ஆனால் இடையில் கையில் அலர்ஜி ஏற்பட்டு கை செயல்படாமல் போனது. எனது மகள் வேலையில்லாமல் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு வருகிறாள்.
அவளுக்கு என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. தினமும் வலியால் கஷ்டப்பட்டு வருவதால் விஷ ஊசி போட்டு என்னை கொன்று விடுங்கள் என்று மருத்துவரிடம் கேட்டும் பார்த்துவிட்டேன்.
இந்த பேட்டி முதல்வரின் கவனத்திற்கு சென்றால் எனக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று வேதனையுடன் கூறியிருக்கிறார் அங்காடித் தெரு சிந்து.
எல்லா மருந்தும் Try பண்ணி பாத்துட்டேன் ? Sindhu Painful Interview
— Cineulagam (@cineulagam) March 1, 2023
Watch>> https://t.co/6xAQtUBBpB#sindhu #angaditherusindhu #udhayanidhistalin #blackpandi #tamilcinema #cineulagam pic.twitter.com/zi7et2eLeS