40 வயதில் இப்படியொரு ஸ்லிம்! நடிகை சினேகாவா இது மிரளவைக்கும் புகைப்படம்..

Prasanna Sneha Indian Actress
By Edward May 19, 2022 05:30 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் புன்னகை அரசியாகவும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா. என்னவளே படத்தின் மூலம் அறிமுகமாகி முன்றே ஆண்டுகளில் பத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சினேகா சிலருடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியும் வந்தார். இதனையடுத்து 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இரு குழந்தைகளை பெற்றெடுத்த சினேகா குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் விளம்பரங்களில் மட்டுமே நடித்து மார்க்கெட்டினை இழந்தார்.

தற்போது உடல் எடையை கட்டுப்பாடோடு வைத்து ஸ்லிம்மாகி இளைஞர்களை ஈர்த்து வருகிறார். டிசர்ட்டில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி இளம் நடிகைக்கே டஃப் கொடுப்பாங்களோ என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.