ஷூட்டிங்கில் விஜய் இப்படிதான் நடந்து கொள்வார்.. உண்மையை உடைத்த 41 வயது நடிகை..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரால் அறிமுகப்படுத்தப்பட்டு அவரின் பல படங்களில் விஜய் கதாநாயகனாக நடித்து பிரபலமானார்.
அதன்பின் மாஸ் படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். பீஸ்ட் படத்தினை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
வரும் பொங்கல் அன்று அஜித்தின் துணிவு படத்துடன் மோதவுள்ளது. இந்நிலையில் விஜய்யுடன் நடித்தது பற்றியும் ஷூட்டிங்கில் அவர் எப்படி நடந்து கொள்வார் என்பதை பற்றிய அவருடன் வசீகரா படத்தில் நடித்த நடிகை சினேகா கூறியுள்ளார்.
விஜய் எப்போது அமைதியாக மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் மனிதராக இருப்பார் என்றும் காமெடி காட்சிகளில் சகஜமாக நடித்து முடித்துவிட்டு அதன்பின் அமைதியாகிவிடுவார் என்றும் கூறியுள்ளார்.
கேமெரா ஆக்ஷன் என்று கூறியதும் வேறு மாதிரியும் அதன்பின் அப்படியே அமைதியான விஜய்யாக மாறிவிடுவார் என்று கூறியிருக்கிறார்.