நடிகை ஸ்ரீலீலாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
Sreeleela
By Karthick Raja
தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் பராசக்தி படம் வெளிவந்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சமீபத்தில் ஸ்ரீலீலா நடிப்பில் வெளிவந்த உஸ்தாத் பகத் சிங் படமும் மோசமான விமர்சனங்கள் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்து அவ்வப்போது இணையத்தில் விவரங்கள் வெளிவரும். அந்த வகையில் தற்போது ஸ்ரீலீலாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகை ஸ்ரீலீலாவில் மொத்த சொத்து மதிப்பு ரூ. 15 கோடி முதல் ரூ. 20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
