முதலமைச்சர் மகனுடன் திருமணம்!! 11வது நாளில் மரணமடைந்த கணவர்!! 20 வயது மூத்தவரை மணந்த டாப் நடிகை...

Bollywood Indian Actress Actress
By Jai Jun 15, 2026 03:30 AM GMT
Report

லீனா சந்தவார்கர்

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக 70, 80களில் திகழ்ந்தவர் தான் நடிகை லீனா சந்தவார்கர். கர்நாடகாவில் ராணுவ வீரர் குடும்பத்தில் பிறந்த லீனா, 1968ல் மா கா மீத் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

சூப்பர் ஸ்டார் நடிகர் வினோத் கன்னாவுடன் நடித்தவர், ராஜேஷ் கன்னா, திலீப் குமார் போன்ற நடிகர்களுடன் நடித்து ஓவர் நைட்டில் டாப் நடிகையாக வளர்ந்தார்.

முதலமைச்சர் மகனுடன் திருமணம்!! 11வது நாளில் மரணமடைந்த கணவர்!! 20 வயது மூத்தவரை மணந்த டாப் நடிகை... | Cm Son Husband Died Within 11 Days Actress Married

திருமண வாழ்க்கை

உச்சத்தில் இருந்த லீனா, அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தை சேர்ந்த சித்தார்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது அவருக்கு 24 வயது.

கோவாவின் முதலமைச்சரான பந்தோட்கரின் மகன் தான் லீனாவின் கணவர் சித்தார். உச்ச நடிகை, முதல்வர் மகனுடன் திருமணம், ஆடம்பர வாழ்க்கை, பல்வேறு கனவுகளுடன் திருமண வாழ்க்கையை தொடங்கினார் லீனா. ஆனால் காலம் அவருக்கு வேறொரு சோகத்தை அளித்தது.

முதலமைச்சர் மகனுடன் திருமணம்!! 11வது நாளில் மரணமடைந்த கணவர்!! 20 வயது மூத்தவரை மணந்த டாப் நடிகை... | Cm Son Husband Died Within 11 Days Actress Married

திருமணமாகி 11 நாட்களான நிலையில் கணவர் சித்தார்த், துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அது வெடித்து உடலில் குண்டுபாய்ந்து சமபவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருமணமாகி 11வது நாளிலேயே தாய் வீட்டுக்கு சென்ற லீனாவால் தான் இப்படி நடந்தது, ராசியில்லாதவர் என்று வசைப்பாட ஆரம்பித்தனர்.

முதலமைச்சர் மகனுடன் திருமணம்!! 11வது நாளில் மரணமடைந்த கணவர்!! 20 வயது மூத்தவரை மணந்த டாப் நடிகை... | Cm Son Husband Died Within 11 Days Actress Married

அதன்பின் பல இன்னல்களுக்கு பின் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்த லீனா, பைராக் படத்தில் நடித்தார். பின் நடிகர் கிஷோர் குமாருடன் பழக்கம் ஏற்பட்டு தன்னைவிட 20 வயது மூத்தவர் என்று தெரிந்தும் திருமணம் செய்து கொண்டார்.

3 முறை விவாகரத்தானவர், அவரது திருமணத்திற்கு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தும் மணமுடித்தார். தற்போது லீனாவுக்கு 75 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.