நடிகை ஸ்ரீலீலாவுக்கு திருமணமா? மணப்பெண் கோலத்தில் வெளிவந்த புகைப்படம்

Sreeleela
By Kathick Jun 02, 2025 03:30 AM GMT
Report

தென்னிந்திய அளவில் தனது நடனத்தின் மூலம் சென்சேஷனலாக மாறியவர் நடிகை ஸ்ரீலீலா. குறிப்பாக தெலுங்கில் தனக்கென்று தனி மார்க்கெட்டை உருவாகியுள்ளனர். மேலும் தற்போது பராசக்தி படத்தின் மூலம் தமிழிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இதுவரை தென்னிந்திய சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த ஸ்ரீலீலா தற்போது பாலிவுட் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். அவரது முதல் ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகை ஸ்ரீலீலாவுக்கு திருமணமா? மணப்பெண் கோலத்தில் வெளிவந்த புகைப்படம் | Actress Sreeleela Puts An End To Wedding Rumours

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவரான ஸ்ரீலீலா, கடந்த சில நாட்களுக்கு முன் திருமண கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு அதன் கீழ், "இன்று எனக்கு ஒரு பெரிய நாள். விரைவில் முழு விவரங்களையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், விரைவில் வருகிறேன்" என்று பதிவு செய்திருந்தார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், ஸ்ரீலீலாவுக்கு திருமணம் என கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து ஸ்ரீலீலா அவரது இன்ஸ்டா பக்கம் மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகை ஸ்ரீலீலாவுக்கு திருமணமா? மணப்பெண் கோலத்தில் வெளிவந்த புகைப்படம் | Actress Sreeleela Puts An End To Wedding Rumours

அதில், "எனது பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டங்களை நாங்கள் வீட்டில் இப்படித்தான் கொண்டாடினோம்" என்று கூறி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இவருடைய திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.