வாய்ப்பு கிடைக்காததுக்கு இதுதான் காரணம்.. சிரித்தபடி எஸ்கேப் ஆன நடிகை ஸ்ரீதிவ்யா..
நடிகை ஸ்ரீதிவ்யா
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துபின் Manasara என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரீதிவ்யா. தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகி ஊதா கலரு நடிகை என்ற பெயரை பிடித்தார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யா 2017க்கு பிம்ன் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். சுமார் 5 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு வெளியான Raid படத்தில் நடித்திருந்தார்.
தற்போது மீண்டும் தன்னுடைய ரீஎண்ட்ரியை கொடுக்க மெய்யழகன் என்ற படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது.
வாய்ப்பு
நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஸ்ரீதிவ்யாவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், ஏன் இவ்வளவு நாள் உங்களை காணவில்லை என்பதுபோல் கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு ஸ்ரீதிவ்யா, நிறைய படம் பண்ணிட்டேன், ஆனால் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். அதனால் கூட இடைவெளி வந்துவிட்டதாக நினைக்கிறேன் என்று கூறி எஸ்கேப் ஆகியிருக்கிறார். அவர் பேசியது க்யூட்டாக இருக்கிறது என்று பலரும் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.
நிறைய படம் பண்ணிட்டேன் ஆனா Choosy- ஆ இருக்கேன் போல... - Sri Divya
— Cineulagam (@cineulagam) September 1, 2024
#Meiyazhagan #Meyyazhagan #Actorkarthi #Angrymoment #SriDivya #prem #96Director #Devadarshini #Cineulagam #AudioLaunch pic.twitter.com/yswCbJKDsA