எப்படி டக்குனு அதுக்கு ஒத்துக்கிட்டீங்க! விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி ஓப்பன் டாக்

Vijaykumar Sridevi Vijayakumar
By Kathick Mar 01, 2025 10:30 AM GMT
Report

பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான ஸ்ரீதேவி விஜயகுமார் தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ஸ்ரீதேவி விஜயகுமார் தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் தனுஷுடன் காதல் கொண்டேன், ஜீவாவுடன் தித்திக்குதே போன்ற நல்ல நல்ல படங்களை கொடுத்திருக்கிறார். 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ராகுல் - ஸ்ரீதேவி தம்பதிக்கு ரூபிகா என்கிற மகள் இருக்கிறார்.

எப்படி டக்குனு அதுக்கு ஒத்துக்கிட்டீங்க! விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி ஓப்பன் டாக் | Actress Sridevi Vijayakumar About Her Marriage

திருமணத்திற்கு பின் சினிமாவிலிருந்து விலகிய ஸ்ரீதேவி, அவ்வப்போது சில திரைப்படங்களில் மட்டுமே தலைகாட்டி வருகிறார். மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பெற்றார்களால் நடத்திவைக்கப்பட்ட தனது திருமணம் குறித்து நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் வெளிப்படையாக பேசியுள்ளார்.

எப்படி டக்குனு அதுக்கு ஒத்துக்கிட்டீங்க! விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி ஓப்பன் டாக் | Actress Sridevi Vijayakumar About Her Marriage

இதில் "எங்களது அரேஞ்சிடு மேரேஜ் தான். என்கிட்ட நிறைய பேரு எப்படி டக்குனு அரேஞ்ச்டு மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டீங்க என கேட்டு இருக்காங்க. அதற்கு காரணம், எங்க அப்பா அம்மா ஒரு வயசு வரைக்கும் நடி, அதற்குப் பின் கல்யாணம் தான் என எப்போதும் தெளிவாக இருந்தார்கள். அப்பா எது சொன்னாலும் நான் மீற மாட்டேன். அதனால் நான் ஏற்கனவே அதற்கு தயாராக இருந்தேன். அப்பா அம்மா சொல்றாங்கன்னா கண்டிப்பா அது நல்லதுக்கு தான் என ஒரு நம்பிக்கை. கடவுள் புண்ணியத்துல அது எனக்கு நல்லபடியா அமைஞ்சிருச்சு" என அவர் கூறியுள்ளார்.