அந்த நடிகருடன் வாழ ஆசைப்பட்டார்!! ஸ்ரீதேவி மரணம் குறித்து ஷாக் கொடுத்த பிரபல நடிகர்..
நடிகை ஸ்ரீதேவி
தென்னிந்திய சினிமா, பாலிவுட் சினிமா என்று டாப் நடிகையாக 90ஸ் காலக்கட்டத்தில் திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து இரு பெண் பிள்ளைகளை பெற்றார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்த ஸ்ரீதேவி, 2018ல் துபாய் ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் மரணமடைந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆலப்புழா அஷ்ரஃப்
இந்நிலையில் மலையாள இயக்குநர் ஆலப்புழா அஷ்ரஃப், நடிகை ஸ்ரீதேவி குறித்து ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதில், ஸ்ரீதேவி சொத்து, நகை, கோடிகளில் கார் என ஆடம்பரமாகத்தான் வாழ்ந்தார்.
ஆனாலும் அவருக்குள் ஒரு இனம் புரியாத சோனம் இருந்து கொண்டே இருந்தது என்பது எனக்கு தெரியும். பாலிவுட்டில் அவர் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியை தீவிரமாக காதலித்தார். இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்ற தகவல் பரவியது.
சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு மிதுன் சக்கரவர்த்தியை திருமணம் செய்து குடும்பம், குழந்தை என செட்டிலாகத்தான் ஸ்ரீதேவி விரும்பினார். ஆனால், அந்த விருப்பம் கடைசிவரை நிறைவேறவே இல்லை.
பின் தான் போனி கபூரை திருமணம் செய்தார். ஸ்ரீதேவியை போனிகபூர் திருமணம் செய்தபோது, போனியின் முதல் மனைவிக்கு பிறந்த மகளுக்கு ஸ்ரீதேவியின் வயது இருக்கும்.
மிதுன் சக்கரவர்த்தியுடன் வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் கடைசிவரை ஸ்ரீதேவிக்கு இருந்தது. ஒருக்கட்டத்தில் மிதுன் மீது வைத்திருந்த காதலை மறந்து போனி கபூருடன் மகிழ்ச்சியாக் வாழத்துவங்கி, குடும்பம், குழந்தை என்று மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கும் போது தான் அவர் மர்மமான முறையில் இறந்தார்.
இந்த மரணத்தில் போனிக்கு தொடர்பு இருக்குமா என்றெல்லாம் விசாரித்தார்கள். முக்கியமாக ஸ்ரீதேவி 200 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் போட்டிருந்தார். அதனால் அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற வதந்திகள் பரவின என்று அஷ்ரஃப் பேட்டியில் கூறி அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறார்.
