பிரபுதேவா நடத்தும் நிகழ்ச்சி.. நடிகைக்கு மரியாதை இல்லையா
Prabhu Deva
Srushti Dange
By Kathick
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருஷ்டி டாங்கே. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நாளை மறுநாள் பிரபுதேவா நடத்தும் Dance Concert ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதில் ஸ்ருஷ்டியும் பங்கேற்று நடனம் ஆட இருந்தார்.
இந்நிலையில் நடிகை ஸ்ருஷ்டி தற்போது அந்த ஷோவில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்து இருக்கிறார். இந்த முடிவுக்கு பிரபுதேவா காரணம் இல்லை, அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டளார்களிடம் இருந்து தனக்கு மரியாதை கிடைக்கவில்லை, சரியான திட்டமிடல் இல்லை என சொல்லி அவர் புகார் கூறி இருக்கிறார்.
நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் இந்த பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படுவைரலாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.