திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து செய்தது ஏன்!!20 ஆண்டுகளுக்கு பின் உண்மையை உடைத்த நடிகை சுகன்யா..
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர்களில் ஒருவர் நடிகை சுகன்யா. நடன கலைஞராக அறிமுகமாகி தமிழில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகையாக புது நெல் புது நாத்து படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து வந்தார். கடந்த 2002ல் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி ஒரே ஒரு வருடத்தில் 2003ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.
இதுகுறித்து அண்மையில் அளித்த பேட்டியில், பெண்கள் எதற்கும் பயந்து ஓடத்தேவையில்லை என்றும் கணவர் மனைவி இருவரும் கலந்து பேசி பின் விவாகரத்து செய்யலாம்.
அப்படியில்லை என்றால் நீதிமன்றம் சென்றும் விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம். விவாகரத்து பெற தயக்கப்பட்டால் கொடுமையான காலங்களை குடும்பவாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.
பிடிக்காத திருமணத்திற்கு விவாகரத்து செய்ய பயப்பட வேண்டாம். அதெல்லாம் கடந்து தான் பெண்கள் வரவேண்டும் என்று நடிகை சுகன்யா தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சுகன்யா ஒரு அரசியல் வாதியின் கட்டுப்பாட்டில் இருந்ததால் சினிமாவில் தொடர்ந்து நடிக்கமுடியாமல் போனதாகவும் அவரால் வாழ்க்கை பாதி நாசமாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.