திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து! 52 வயதில் தனிமையில் இருக்கும் நடிகை சுகன்யா?
சினிமாவை பொருத்தவரையில் நடிகைகளின் மார்க்கெட் அவர்களின் அடுத்தடுத்த படங்களை வைத்து உயர்கிறதோ இல்லையோ, எப்படி நடிக்கிறார்கள், அவர்களின் வயது உடல் தகுதியை வைத்து தான் கமிட் செய்யப்பட்டுவார்கள். அப்படி 35 வயதை தாண்டிய 90ஸ் கிட்ஸ் நடிகைகள் வாய்ப்பிற்க்காக காணாமல் சென்று விடுகிறார்கள்.
அதில் ஒருசிலர் மட்டுமே படங்களில் பார்க்க முடிகிறது. அந்தவரிசையில், 80 மற்றும் 90களில் அனைவராலும் கவரப்பட்ட நடிகை சுகன்யா, 22 வயதில் சினிமாவில் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார்.
ஆனால், நடிகை சுகன்யா ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியின் வசம் இருந்ததாக பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளது பகீர் கிளப்பியுள்ளது. எப்போதுமே சினிமாவின் உண்மை தன்மையை வெளிப்படையாக கூறுபவர் பயில்வான் ரங்கநாதன்.
அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதில் அமைச்சராக இருந்த ஒருவர் சுகன்யாவை அரவணைப்பில் வைத்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
நடிகை சுகன்யா 2002ல் ஸ்ரீதர் ராஜகோபாலை திருமணம் செய்தார். திருமணமாகி ஒரே ஆண்டில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 2003ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
2003ல் அவருக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனையால் இனிமேல் திருமணமே வேண்டாம் என்று 30 வயதிலேயே முடிவெடுத்தார்.
தற்போது 52 வயதாகியும் தனிமையில் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நம்ம சுகன்யா மேடமா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.

