கார்த்திக் என்னை ஒரு பெண்ணாவே மதிக்க மாட்டார்!! பல ஆண்டுக்கு பின் உண்மையை கூறிய பிரபல நடிகை..
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சுலோக்ஷனா. குழந்தை நட்சத்திரமாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த சுலோக்ஷனா தூரல் நின்னு போச்சு படத்தில் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
ரஜினி, கமலுடன் நடித்தும் இருக்கும் சுலோக்ஷனா, நடிகர் கார்த்திக் பற்றிய சில அனுபவங்களை பகிர்ந்துள்ளர். கார்த்திக் என்னை ஒரு பெண்ணாகவே மதித்ததே கிடையாது என்றும் ஷூட்டிங்கில் தன்னை கிண்டல் செய்வதே வழக்கமாக வைத்திருப்பார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் யாரிடம் சொல்லாத ஒரு வார்த்தையை என்னிடம் கூறியிருக்கிறார். அனைவரிடமும் சகஜமாக பழக்கூடிய கார்த்திக் என்னை பெண்ணாகவே நினைக்கவில்லை. நீ எனக்கு ஒரு பாய் ப்ரெண்ட், உன்னை பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
பெண் என்று ஒரு ஃபீலிங் கூட வரவில்லை என்று தெரிவித்திருக்கிறாராம் கார்த்திக். உனக்கு யார் நடிக்க வாய்ப்பு கொடுத்தது. ஹீல்ஸ் போட்டு நடக்க கூட தெரியாத இவங்களுக்கு நாயகி வாய்ப்பு கொடுத்திருக்காங்களே எனும் கிண்டல் செய்வார் என்று கூறியுள்ளார்.
அவர் அப்படி கிண்டல் செய்தாலும் யாரும் கோபப்படாமல் அவரை பார்த்து சிரிக்கத்தான் செய்வார்கள் என சுலோக்ஷனா பகிர்ந்துள்ளார்.