சிறுமியாக இருக்கும் போது திருமணம்!..கணவர் கொடுத்த டார்ச்சர்!..நடிகை சுமதி உருக்கம்
Vadivelu
Tamil Actress
Actress
By Dhiviyarajan
காமெடி நடிகையான சுமதி, வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக் பாஸ் வீடும் அதுவும் ஒன்னு !..கமல் சாருக்கு இது கூட தெரியலையே.. உலக நாயகனை பொளந்து கட்டிய ரேகா நாயர்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சுமதி தன்னுடைய வாழ்க்கையில் நடந்து கசப்பான அனுபவத்தை பேட்டியல் கூறியுள்ளார்.
அதில், 16 வயதாக இருக்கும் போதே என்னை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். என்னுடைய முதல் கணவர். சொந்த மாமா தான். ஒரு கட்டத்தில் அவர் என்னை அதிகம் துன்புறுத்தினர். இதனால் நான் அங்கு இருந்து சென்னை வந்துவிட்டேன். இங்கு வந்து வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டேன்.
சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். அதற்கு என் கணவர் உறுதுணையாக இருந்தார். முன்பு எல்லாம் நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. வீட்டிற்கு வாடகை கொடுக்க கூட கஷ்டமாக இருக்கிறது என்று சுமதி கூறியுள்ளார்.