பலான காட்சிகளால் சொத்தை சேர்த்த நடிகை சன்னி லியோன்!! வியக்கவைக்கும் மொத்து சொத்து மதிப்பு
10 வருஷத்திற்கு முன் கன்னடியன் - அமெரிக்க நடிகையாக இருந்து பலான படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னி லியோன்.
அதன்பின் அந்த படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட சன்னி லியோன் இந்தியாவில் செட்டிலாகி Jism 2 படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் 2012ல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று 6வது இடத்தினை பிடித்தார்.
பின் பல படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் கவர்ச்சி நடிகையாக இந்தி, தெலுங்கு, தமிழ், மராத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழில் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய வம்சாவளி குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் மூன்று குழந்தைகளை பெற்று, தன் கணவருடன் வளர்த்து வரும் சன்னி லியோனின் மொத்த சொத்து மதிப்பு 100 கோடிக்கும் மேல் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு படத்திற்காக 1.2 கோடி சம்பளமாக பெற்று வரும் சன்னி லியோன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்ட பங்களா, மும்பையில் ஒரு வீடு வைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராம், விளம்பரங்கள், பிராண்ட் அம்பாஸ்டர், சன் சிட்டி மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் போன்றவற்றின் மூலம் சம்பாதித்து வருகிறார் சன்னி லியோன்.